கோவை சுகுணா ரிப் வி மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகளின் நடனம்,நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன..
கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள சுகுணா ரிப் வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா காளப்பட்டி ரோட்டில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது… சுகுணா மோட்டார்ஸ் அண்ட் பம்ப்ஸ் மற்றும் சுகுணா கல்வி நிலையங்களின் தலைவர் லக்ஷ்மி நாராயணசுவாமி, மற்றும் பள்ளியின் தாளாளர் . சுகுணா லட்சுமி நாராயணசாமி, ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், அறங்காவலர் . ராஜாமணி அம்மாள், நிர்வாக இயக்குனர் அனிஷ்குமார், பள்ளியின் இயக்குனர் மற்றும் முதல்வருமான ஆண்டனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜ் முருகன், ,ஓய்வு பெற்ற முதன்மை வன பாதுகாவலர் கந்தசாமி, ஆகியோர் கலந்து கொண்டனர்.…நிகழ்ச்சியி்ல் கடந்த கல்வி ஆண்டில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து கண்கவர் ஆடை அணிந்த குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள்,மாணவ,மாணவிகளின் சாகச விளையாட்டு போட்டிகள்,நாடகங்கள் போன்ற நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.