• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இருதயம் மற்றும் சர்க்கரை நோய் மருத்துவ சிகிச்சை முகாம்…

ByKalamegam Viswanathan

Dec 4, 2023

சோழவந்தான் லயன்ஸ் கிளப்,டாக்டர் வேலு ஹார்ட் மற்றும் ரிதம் கிளினிக் இணைந்து நடத்தும் இருதயம் மற்றும் சர்க்கரை நோய் இலவசமருத்துவ சிகிச்சை முகாம் சோழவந்தான் எம்வி எம் மருது மகாலில் நடந்தது. முகாமிற்கு சோழவந்தான் லயன்ஸ் கிளப் சங்கத் தலைவர் டாக்டர் எம் வி எம் மருது பாண்டியன் தலைமை தாங்கினார். ஆளுநர் டாக்டர் சசிகுமார் முன்னிலை வகித்தார். முன்னாள் ஆளுநர் இன்ஜினியர் செல்லப்பாண்டி முகாமை தொடங்கி வைத்தார். அரிமாசங்கச் செயலாளர் மகேந்திரன் வரவேற்றார். முகாமில் இருதய சிறப்பு மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர் வடிவேலு, டாக்டர் ரமேஷ் ஆகியோர் நோயாளிகளுக்கு இலவசமாக பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கினர். இதில் இருதய மருத்துவம், பொது மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம், ஈசி ஜி, இருதய ஸ்கேன், இரத்த சர்க்கரை அளவு பரிசோதனை, ரத்த கொழுப்பு அளவு பரிசோதனை இவை அனைத்தும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது. அரிமா சங்கமுன்னாள் தலைவர் ராஜ ஸ்டுடியோகண்ணன் நன்றி கூறினார்.முகாம் ஏற்பாடுகளை சோழவந்தான் லயன்ஸ் கிளப் சங்கத்தினர் செய்திருந்தனர். இம்முகாமில் சோழவந்தான் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து ஏராளமானவர்கள் பயன் பெற்றனர் இதில் லயன்ஸ் கிளப் சங்க நிர்வாகிகள் பொருளாளர் ஜெய் கணேஷ், பரிசுத்த ராஜன், குமரேசன், காந்தன் சரவணன் டிஜே ஆறுமுகம் மற்றும் நூலகர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.