• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Dec 1, 2023

நற்றிணைப் பாடல் 309:

நெகிழ்ந்த தோளும், வாடிய வரியும்,
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி,
‘யான் செய்தன்று இவள் துயர்’ என, அன்பின்
ஆழல்; வாழி! – தோழி! – ‘வாழைக்
கொழு மடல் அகல் இலைத் தளி தலைக் கலாவும் பெரு மலை நாடன் கேண்மை நமக்கே
விழுமமாக அறியுநர் இன்று’ என,
கூறுவைமன்னோ, நீயே;
தேறுவன்மன் யான், அவருடை நட்பே.

பாடியவர் : கபிலர் திணை : குறிஞ்சி

பொருள் :

தோழீ! தளர்வடைந்த தோளையும் வாட்டமுற்ற இரேகையையும் மாந்தளிரின் தன்மை போன்ற அழகு இழந்த எனது நிறத்தையும் நோக்கி; ‘என்னால் இவளுக்கு இத் துயர் செய்யப்பட்டது’ என்று கூறி; என்பாலுள்ள அன்பின் மிகுதியினால் நீ அழாதே கொள்! நெடுங்காலம் வாழ்வாயாக! வாழையின் கொழுவிய மடலகன்ற கட்டைக் குருத்தாகிய இலையிலே தாற்றினுள்ள இனிய நீர் கலந்து தங்கியிருக்கும் பெரிய மலை நாடனுடைய நட்பானது; நமக்குத் துன்பமாயிருக்கவும் அதனை அறிபவர் இல்லையே என்று கூறாநிற்பை; ஐயோ! அவருடைய நட்பை நான் மிக நன்றாகத் தௌ¤ந்திருக்கின்றேனாதலால் ஆற்றியிருப்பேன் காண்!