• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

“சூரகன்” திரை விமர்சனம்..!

Byஜெ.துரை

Nov 30, 2023

தேர்ட் ஐ சினி கிரியேஷன்ஸ் சார்பில் கார்த்திகேயன் தயாரித்து,ஜேசன் வில்லியம்ஸ்
கதை எழுதி சதீஷ் கீதா குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “சூரகன்”.

இத் திரைப்படத்தில் தயாரிப்பாளரான கதாநாயகன் கார்த்திகேயன், சுபிக்ஷா கிருஷ்ணன், சுரேஷ் மேனன், பாண்டியராஜன் , ரேஷ்மா பசுப்புலேட்டி, வின்சென்ட் அசோகன், மன்சூர் அலிகான், வினோதினி வைத்தியநாதன், நிழல்கள் ரவி,
மிப்பு சாமி உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தலைகீழாக நின்றால்தான் எல்லா காட்சிகளும் சரியாகத் தெரியும் என்ற ஒரு பார்வைக் குறைப்பாட்டுடன் இளம் அதிகாரி போலீஸ் (கார்த்திகேயன்) அந்த பிரச்னை காரணமாக ஒரு சம்பவத்தில் தவறுதலாக ஒரு பெண்ணை சுட்டு பணி நீக்கம் செய்யப்படுகிறார் .

அக்கா(வினோதினி வைத்யநாதன்)மாமா (பாண்டியராஜன்) உடன் இருக்கும் அவர்,ஒரு காரில் இருந்து சாலை ஓரமாக உயிருக்கு போராடும் ஒரு பெண்ணைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார். நண்பன் ஒருவன் பணியாற்றும் மதுபான பார் ஒன்றில் அந்தப் பெண் இருந்தது தெரியவர, அவளோடு உடன் இருந்த பெண்கள் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார்.

ஒரு கொடூரமான நபர்தான் ( வின்சென்ட் அசோகன்) காரில் இருந்து பெண்ணை உருட்டி விட்டது தெரிய வர, இன்னொரு பெண் அந்தக் கொடூர நபரால் கொல்லப்பட, ஒளிந்து இருக்கும் இன்னொரு நபரைக் கண்டு பிடிக்க, அது ஒரு அமைச்சர் , மற்றும் தொழிலதிபர்களின் பாலியல் வீடியோ கொலை முயற்சியில் போய் முடிகிறது .

மேற்படி கொடூர நபர் , போலீஸ் அதிகாரியைக் கொல்ல வர, அடுத்து என்ன நடக்க போகிறது என்பது தான் சூரகன் திரைப்படக் கதை. உடம்பு தெரிய நாயகன் உடற்பயிற்சி செய்வது, மதுபாரில் ஆடிப் பாடுவது மற்றும் சண்டைக் காட்சிகள் என சிறப்பாக நடித்துள்ளார். கீதா குமார் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. மொத்தத்தில் “சூரகன்” திரைப்படம் விறு விறுப்பு…