• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, அன்னதானம், நலத்திட்ட உதவி – நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த்…

ByG.Suresh

Nov 27, 2023

சிவகங்கை நகர் திமுக சார்பிலும் நகர் இளைஞர் அணியின் சார்பிலும் மாநில இளைஞரணி செயலாளர் மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கையில் அமைந்துள்ள தாய் இல்லத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அறுசுவை உணவு வழங்கினார் இதனை அடுத்து கோர்ட்டுவாசலில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன அதனைத் தொடர்ந்து நகரத் துணைத் தலைவர் கார் கண்ணன் ஏற்பாட்டில் கட்சி அலுவலகம் எதிரே துரை அண்ணன் தலைமையில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன, மேலும் தொண்டரோட்டில் உள்ள அரசு பணிமனை முன்பு கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சி சிவகங்கை நகர் திமுக செயலாளர் சி.எம்.துரைஆனந்த் அவர்கள் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் கே.எஸ்.எம் மணிமுத்து அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் நகரமன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், அயூப்கான், மதியழகன் நகர் இளைஞர் அணி ஹரிஹரன், மகேஷ், சேதுபதி, விஜய் ராகவன், பிரபாகரன், அருண் பாண்டியன், சேஷா விஜய் , ஆர்டி.சேகர், கழக நிர்வாகிகள் ரமேஷ், சேது , தேவஸ்தானம் முருகேசன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.