• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

“சில நொடிகளில்” திரை விமர்சனம்

Byஜெ.துரை

Nov 23, 2023

புன்னகைப் பூ’ கீதா தயாரித்து வினய் பரத்வாஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்
“சில நொடிகளில்”

இத் திரைப்படத்தில் புன்னகைப் பூ’ கீதா ரிச்சர்ட் ரிஷி,யாஷிகா ஆனந்த் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்

லண்டனில் சொந்தமாக மருத்து வனை வைத்துள்ள, பிளாஸ்டிக் சர்ஜரியில் ஸ்பெஷலிஸ்ட் ஆன டாக்டர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்

இந்நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு கள்ளக் காதல் ஏற்படுகிறது கள்ள காதலியின் திடீர் மரணத்துக்கு இவர் காரணமாகி விடுகிறான்.

யாருக்கும் தெரியாதபடி அவளது சடலத்தை அப்புறப்படுத்தி விடுகிறான்.

ஒரு கட்டத்தில் அவன் செய்த அந்த குற்றச் செயலை ஒரு பெண் கண்டுபிடித்து பணம் கேட்டு அவனை மிரட்டுகிறாள்.

இந்த விவகாரம் அவனுடைய மனைவிக்கும் தெரியவருகிறது.

அவன் கொலையாளி என்ற விவரம் அவனை மிரட்டும் பெண்ணுக்குத் தெரிந்தது எப்படி? கணவன் கொலையாளி என்பது தெரிந்தும் அவனது மனைவி என்ன செய்தாள்? இந்த சிக்கல்களிலிருந்து அவன் மீண்டு வந்தாரா? இல்லையா? என்பது தான் இத் திரைப்படத்தின் கதை

ரிச்சர்ட் ரிஷி காதாபாத்திரமானது மன இறுக்கம், பயம், பதட்டம், குற்றவுணர்ச்சி, இயலாமை போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டிய நடிப்பு கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார்

காதலி யாஷிகாவோடு தனது உடலால் கலந்து மகிழும் காட்சிகளில் ஆண்களை பொறமை பட வைத்துள்ளார்

யாஷிகா ஆனந்த், ரிச்சர்ட் ரிஷியுடனான நெருக்கமான காட்சிகளில் எனக்கு இன்னும் வேண்டும் என்று யாஷிகா ரிச்சர்ட் ரிஷியை கட்டி தழுவும் காட்சி இளைஞர்களை சூடேற்றும்

ரிச்சர்ட்டின் மனைவியாக ‘புன்னகைப் பூ’ கீதா. கணவர் தன்னுடன் மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்ற குறையைச் சுமந்துகொண்டு, குழந்தையில்லாத ஏக்கத்தில் தவிப்பவராக தனது நடிப்பை சிறப்பாக செய்துள்ளார்.

கிளைமாக்ஸில் வெளிப்படும் அவரது வேறொரு பரிமாணமும் சிறப்பு!

ஹீரோவை பணம் கேட்டு மிரட்டும் அந்த இளம்பெண்ணின் வில்லத்தனம் படத்திற்கு கூடுதல் பலம்

லண்டனிலுள்ள செம்ஸ்போர்டு நகரத்தின் ரசிக்க வைக்கும் பிரமாண்ட அழகை,தன் கேமரா கண்களால் அழகாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் அபிமன்யு சதானந்தன்

பின்னணி இசையை, கதையோட்டத்திற்கு பொருத்தமாக அமைத்துள்ளார்
பாலிவுட் இசையமைப்பாளர் ரோஹித் குல்கர்னி

மொத்தத்தில்”சில நொடிகளில்” திரைப்படம் மனைவிக்கு துரோகம் செய்யும் ஆண்களுக்கு சவுக்கடி