மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுராஜா., தொட்டப்பநாயக்கணூரைச் சேர்ந்த உறவினரை பார்ப்பதற்காக தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தைச் சேர்ந்த தனிக்கொடி என்பவரது தொட்டத்தின் வழியாக வந்தாக கூறப்படுகிறது.,
தனிக்கொடி தனது தோட்டத்தில் வனவிலக்குகளிலிருந்து பயிர்களை பாதுகாத்துக் கொள்ள சட்டவிரோதமாக மின் வேளி அமைந்திருந்த சூழலில், அவ்வழியாக வந்த உத்தப்புரம் கிராமத்தைச் சேர்ந்த அழகுராஜா என்பவர் மின் வேளியில் சிக்கி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனிடையே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேளி மூலமாக பாதிப்பு ஏற்படும் என அஞ்சி உடலை அருகே உள்ள கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலிசார் கிணற்றிலிருந்து உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






; ?>)
; ?>)
; ?>)
