• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தலைமை அலுவலகம் எதிரே பொதுமக்கள் சாலை மறியல்…

ByKalamegam Viswanathan

Nov 3, 2023

மதுரை மாநகராட்சி பகுதியான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தெரு பகுதியில் பாதாள சாக்கடை சரிவர இயங்கவில்லை. மேலும், வார்டு 60 மற்றும் 70 வார்டு இடையான எல்லை பிரச்சினை உள்ள காரணத்தால் என யார் பாதாள சாக்கடையை சரி செய்வது என்ற பிரச்சனையால் மாநகராட்சி அதிகாரிகள் கிடப்பில் போட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து பாதாள சாக்கடை பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் மதுரை பைபாஸ் சாலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலகம் எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த எஸ். எஸ். காலனி காவல்துறையினர் மற்றும் இரண்டு வார்டு கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தைக்கு பின் மறியல் கைவிடப்பட்டது.