• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

ஜான்சன் தொழில்நுட்பக் கல்லூரியில் தீ விபத்து – லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

BySeenu

Nov 1, 2023

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் பிற்பகலில் கரும்புகை வெளியேறியது. உடனடியாக கல்லூரி வளாகத்தில் இருந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அன்னூர், அவிநாசி மற்றும் சூலூர் தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

சம்பவ இடத்திற்கு வந்துள்ள கருமத்தம்பட்டி போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆடிட்டோரியத்துக்குள் சென்ற மூவருடைய நிலை குறித்து தகவல் தற்போது வரை வெளியாகாத நிலையில் விபத்தில் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்து முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை.