• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஊராட்சி செயலர் நடவடிக்கையை கண்டித்து, கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணிப்பு…

ByKalamegam Viswanathan

Nov 1, 2023

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் கிராமத்தில் ஊராட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இக்கிராமசபை கூட்டத்திற்கு பொதுமக்களுக்கு முறையான அழைப்பு கொடுக்கவில்லை என கூறி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி, கடல் கனி மற்றும் துணைத் தலைவருக்கும், வார்டு உறுப்பினர்களுக்கும் ஊராட்சி செயலர் முறையான தகவல் தெரிவிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதாக கூறி அப்பகுதி பொதுமக்களும் வார்டு உறுப்பினர்களும் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.

மேலும், கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதி செய்து தரவில்லை முக்கியமான குடிநீர் பிரச்சினை கூட தீர்வு கிடைக்கவில்லை என கூறி, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி கடல் கனியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் நடந்து கொண்டிருந்த பொழுது ஊராட்சி செயலர் தீர்மானம் நோட்டில் கையெழுத்து வாங்க முயன்றதால் வாக்குவாதம் ஏற்பட்டு பொதுமக்கள் அனைவரும் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர் காவல்துறை பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர். அப்பகுதி மக்கள் உடனடியாக இந்த ஊராட்சி மன்ற செயலாளர் சீமான் மாற்ற வேண்டும். கடந்த 15 ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறார் என குற்றச்சாட்டு கூறினர்.