• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஹார்லி டேவிட்சன் பைக்குகள் வாங்க ஆர்வம் காட்டும் பைக் பிரியர்கள்..!

BySeenu

Oct 22, 2023

கோவையில் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் வாங்க ஆர்வம் காட்டும் பைக் பிரியர்கள்..! கோவையின் எக்ஸ்க்ளூசிவ் ஷோரூமில் 300 பைக்குகள் புக்கிங்க ஆகியுள்ளது!

கோவை ஒலம்பஸ் பகுதியில் உள்ள வசந்தி மோட்டார்ஸின் பிரத்தியேக ஹார்லி டேவிடசன் (Harley Davidson) ஷோரூமில் பத்து ‘The X 440’ பைக்குகளை வாடிக்கையாளர்கள் டெலிவரி எடுத்தது சென்றனர்.

கோவையில் ஹார்லி டேவிடசன் பைக்குகளுக்கு உள்ள ஒரு பிரத்தியேக ஷோரூமை வசந்தி மோட்டார்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறது. இங்கு அண்மை வரவான The X 440 ரக 3 வகை பைக்குகள்( The X 440 Mustard Denim, The X 440 Vivid , The X 440 S) இன்று அறிமுகம் செய்யபட்டு வடிகையாளர்களால் டெலிவரி எடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வசந்தி மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேனஜிங் பார்ட்னர் திரு. பிரேம் ஆனந்த, ஹீரோ மோட்டார்ஸ் – கோவையின் சேவை பிரிவு மேலாளர் சுகேஷ் பிரகாஷ், விற்பனை பிரிவு மேலாளர் வினித் செல்வகுமார், மற்றும் 49 பைகர்ஸ் குழுவிலிருந்து ராஜேஷ் மற்றும் வசந்தி மோட்டார்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் திரு. சுகேஷ் பிரகாஷ் அவர்கள் புதிதான ஹார்லி டேவிட்சன் The X 440 ரக பைக்குகளின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கினார். இந்த ஹார்லி டேவிட்சன் The X 440 ரக பைக்குகள் சிறந்த வாகன ஓட்டும் அனுபவத்தை தரும்,” என்றார்.

வசந்தி மோட்டார்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜேந்திரன் கூறுகையில்,

கோவையின் பிரத்தியேக ஹார்லி டேவிட்சன் ஷோரூமாக இருப்பதில் வசந்தி மோட்டார்ஸ் பெருமைப்படுகிறது. மொத்தம் 300 ஹார்லி டேவிட்சன் பைக்குகள் முன்பதிவு ஆகி உள்ளது.வரும் மாதங்களில் எங்களுக்கு ஹார்லி டேவிட்சனிடம் இருந்து வரவர டெலிவரி செய்வோம்.

கோவை மக்களிடம் ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு மிக பெரும் ஆதரவு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.