• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம..!

Byவிஷா

Oct 16, 2023

இலங்கை கைது மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாம்பன் சாலை பாலத்தில் நாளை மறுநாள் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
நேற்று முன்தினம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தில் இருந்து, 500-க்கும் மேற்பட்ட விசைப்படகில், 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மற்றும் அவர்கள் வைத்திருந்த 5 படகுகளை பறிமுதல் செய்ததோடு, 27 மீனவர்களையும் கைது செய்தனர். இந்த நிலையில், இலங்கை கைது செய்த மீனவர்கள் 27 போரையும், 5 படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமீப காலமாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுக்க கோரி, மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.