• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் திரைப்படத்திற்காக வரலாற்று வரம்பை உருவாக்க உலக கோப்பை கிரிக்கெட்டில் உறுமும் ‘டைகர்’

Byஜெ.துரை

Oct 12, 2023

யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம், தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் ‘டைகர்-3’ படத்திற்காக இதுவரை செய்யப்பட்டிராத ஒரு சந்தைப்படுத்தும் கூட்டணியாக ஸ்டார் போர்ட்ஸ் ஒளிபரப்பு நெட்வொர்க்குடன் இணைந்துள்ளது.

“டைகரின் உறுமல் உலக கோப்பை கிரிக்கெட் முழுவதும் கேட்கும். ஏனென்றால் தயாரிப்பாளர்கள் இதுவரை முயற்சித்திராத சந்தைப்படுத்தும் கூட்டணியாக அதாவது இந்தியாவின் அனைத்து விளையாட்டுக்களை சுற்றிலும் மட்டுமல்லாது பெருமைமிக்க உலகளாவிய ஓடிஐ கிரிக்கெட் போட்டிகளிலும் இதை யஷ்ராஜ் பிலிம்ஸ் விளம்பரப்படுத்த உள்ளது.

“இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை டைகர்-3 எடுத்துச் செல்லும். மேலும் சல்மான்கானும் இந்தியாவிலும் மற்றும் மிக முக்கியமான கிரிக்கெட் போட்டிகளிலும், போட்டி முழுதும் உலக கோப்பை கிரிக்கெட் கருப்பொருளுடன் ஓடக்கூடிய சக பிராண்டுகளின் விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார்.

உலக கோப்பைக்காக இதுவரை நிகழ்ந்துள்ள எல்லாவற்றிலும் இதுதான் மிகப்பெரிய திரைப்பட சந்தைப்படுத்தும் கூட்டணி “2019 உலக கோப்பை போட்டிகள் 500 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை சென்றடைந்தன.

2019ல் நடைபெற்ற இந்தியா vs பாகிஸ்தான் போட்டி 200 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்தது.

அதனால் 2023ல் நடைபெறும் போட்டி வானாளவிய பார்வையாளர்களை சென்றடையும் என்பதையும் அதில் டைகர்-3 எந்த அளவுக்கு பலனை மிகப்பெரிய அளவில் கைப்பற்றும் என்பதையும் ஒருவர் எளிதாக யூகிக்க முடியும்

மனிஷ் சர்மா இயக்கத்தில் ஆதித்ய சோப்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள டைகர்-3 தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இது யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸில் இருந்து உருவான புதிய படம். இப்படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடித்துள்ளார்.