• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தேசிய அளவிலான நாய் கண்காட்சி..! பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த பல்வேறு இன நாய்கள்..!

Byகுமார்

Oct 8, 2023

மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த பல்வேறு இன நாய்கள்!!

மதுரையில் நாய்கள் வளர்ப்பதில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடத்தப்படும் தேசிய அளவிலான நாய் கண்காட்சி மதுரையில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு இனங்களை சேர்ந்து 55 இன நாய்கள் பங்கேற்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

மதுரை கெனன் கிளப் சார்பில் மதுரை தமுக்கம் தமுக்கம் குளிருட்டப்பட்ட உள்அரங்கில் நடைபெற்ற இந்த தேசிய அளவிலான 37-38 வது நாய் கண்காட்சியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுடெல்லி, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான நாய்கள் கலந்துகொண்டன.

ஆஸ்திரேலியா செப்பர்டு, ஜெர்மன் ஷெப்பர்ட், கிரேட்டேன், அஸ்கர் மற்றும் தமிழக வகைகளான சிப்பிப்பாறை, ராஜபாளையம், கன்னி, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முதுர்கவுடர் உள்பட 55 வகைகளை சேர்ந்த 335 நாய்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றன.

அப்போது உரிமையாளர்கள் தங்களது நாய்களுடன் மைதானத்தில் வலம் வந்து காட்சிப்படுத்தினர். நடுவர்களாக ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த மூன்று நடுவர்கள் பங்கேற்று சிறந்த நாய்ககளுக்கு கேடயம் பதக்கங்களை வழங்கினர். இதில் விதவிதமான உயர்ரக நாய்கள் பங்கேற்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் இந்த ஆண்டு இந்திய நாட்டின நாய்களை ஊக்கப்படுத்தும் விதமாக கண்காட்யில் பங்கேற்ற சிப்பிப்பாறை, ராஜபாளையம், கன்னி. உள்ளிட்ட பல்வேறு நாட்டு இன நாய்களுக்கு சிறப்பு விருது மற்றும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது

கண்காட்சி குறித்து பேட்டி அளித்த கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு விநாயகமூர்த்தி, நாய்கள் வளர்ப்பதில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் இது போன்ற நாய்கண்காட்சி நடத்தபட்டு வருகிறது என்றும் இந்த ஆண்டு எப்போதும் இல்லா அளவில் பல்வேறு இனங்களை சேர்ந்த அரிய வகை நாய்கள் பங்கேற்றன. உலக அளவிலான நடுவர்கள் மற்றும் முதல் முறையாக குளிரூட்டப்பட்ட உள்அரங்கில் இந்த நாய்கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும், சாதாரணமாக வீடுகளில், அடுக்குமாடி வீடு குடியிருப்புகளில், தோட்டத்துடன் கூடுய வீடுகளில் என்ன வகையான நாய்களை வளர்ப்பது பாராமரிப்பது போன்ற ஆலோசனைகளும் வழங்கி வருகிறோம் என்றும் அவர் கூறினார்.