• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தைக் கேட்டு மிகவும் அதிர்ச்சி – முகநூல் பக்கத்தில் அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் தகவல்…

ByKalamegam Viswanathan

Aug 26, 2023

இன்று காலை, மதுரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நடந்த உயிரிழப்புகள் மற்றும் பலர் காயம் அடைந்ததைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன். நிறுத்தப்பட்ட ரயிலின் பெட்டிக்குள் பயணிகள் சமைக்க முயன்றபோது சிலிண்டர் வெடித்ததாக முதற்கட்ட விசாரணையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று, ஒரு பள்ளி விழாவிற்காகச் சென்னை வந்திருந்த நான், இந்த இக்கட்டான நேரத்தில் என்னாலான உதவிகளை அளித்திட இப்போது மதுரை விரைகிறேன். என முகநூல் பக்கத்தில் அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் தகவல் வெளியிட்டுள்ளார்.

மதுரை சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.

விபத்தில் உயிரிழந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு தலா ₹3 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு.

ரயில்வே நிர்வாகம் சார்பில் ஏற்கனவே தலா ₹10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.