தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் கொடைக்கானல், ராமேசுவரத்தில் விரைவில் ஹெலிகாப்டர் தளம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சுற்றுலாத்துறையின் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் சென்னையில் சுற்றுலாத்துறை தலைமை அலுவலகத்தில் அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில், தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் கொடைக்கானல், ராமேசுவரம் ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்குவதற்காக ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியின் அழகை இரவிலும் ரசிக்க லேசர் உதவியுடன் ஒளியூட்டம் செய்ய முயற்சிகள், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் பார்வையாளர் மாடம், முதலியார்குப்பம் படகு குழாம் அருகில் ஓடியூர் ஏரியில் அமைந்துள்ள தீவுப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் படகில் செல்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவதால் இங்கு ரூ.50 லட்சம் மதிப்பில் நீர் விளையாட்டுகள், கடற்கரை விளையாட்டுகள், தேநீர் விடுதி போன்ற வசதிகளை செய்வதற்கு அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது.
உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் ஈர்த்துள்ள, பிச்சாவரம் அலையாத்தி காடுகளை மேம்படுத்த, இங்கு பூங்கா, திறந்தவெளி முகாம், காட்சி கோபுரம், படகு குழாம், தங்கும் அறைகள், உணவகம் போன்றவற்றை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றம் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளியை தூக்கிலிட கோரிக்கை..,
- மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்..,
- துணை குடியரசுத் தலைவரை அதிகாரிகள் வரவேற்பு..,
- ஆசிரியர்கள் பற்றாக்குறை போக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..,
- பரமாச்சாரியா சுவாமிகளின் ஜென்ம நட்சத்திர திருவிழா..,
- குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த அகவை 70_ம் விழா..,
- 25 கிலோ நெகிழிப் பொருட்கள் பறிமுதல்..,
- விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் ஆய்வு..,
- கழனிவாசல் கிராமத்தில் சிபிஎம் காத்திருப்பு போராட்டம் வெற்றி…
- ஹோமியோபதி கல்லூரி கட்டிட பணிகளுக்கான பூமி பூஜை ரத்து..,













; ?>)
; ?>)
; ?>)