• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தாராப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் மது பிரியர்கள் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்

ByKalamegam Viswanathan

Jul 27, 2023

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலம் ஊராட்சி தாராப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததின் பெயரில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு எம். எல். ஏ. தனது சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிழற்குடை அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் தினசரி மாலை மற்றும் இரவு நேரங்களில் கொடிமங்கலம் பகுதியில் உள்ள மதுபான கடைகளில் மதுபானங்கள் வாங்கிச் செல்லும் மது பிரியர்கள் தாராபட்டி பேருந்து நிறுத்தத்தில் உள்ள நிழற்குடை உள்ளையே அமர்ந்து மது அருந்துவதும் பேருந்து நிறுத்தங்களில் நிற்கும் பெண்கள் மற்றும் பயணிகளிடம் தகாத வார்த்தைகள் பேசுவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

இதன் உச்சகட்டமாக சில தினங்களுக்கு முன்பு நிழல்குடையில் இருந்த இரும்பு கைபிடி கம்பியை உடைத்து அருகில் உள்ள கண்மாய்க்குள் வீசி சென்றுள்ளனர். இதனால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் முக்கியமாக பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் மது பிரியர்களின் அட்டகாசத்தை காவல்துறை தடுத்து நிறுத்த வேண்டும் என தாராபட்டி பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். மேலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு குற்ற சம்பவங்கள் நிகழா வண்ணம் தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.