• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மின் நுகர்வோர்களுக்கு ஜூலை 24 முதல் சிறப்பு முகாம்..!

Byவிஷா

Jul 22, 2023

தமிழகத்தில் ஜூலை 24 முதல் மின் நுகர்வோர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் வருகின்ற ஜூலை 24ஆம் தேதி முதல் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயர் மாற்றம் முகாம் நடைபெற உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. மின் நுகர்வோர்கள் தங்கள் இணைப்புக்கான விவரங்களை புதுப்பிக்கும் விதமாகவும் மின் இணைப்புகளில் உள்ள பெயரை மாற்றும் வகையில் தமிழகம் முழுவதும் சிறப்பு பெயர் மாற்றும் முகாம் நடத்துவதற்கு மின்வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி வருகின்ற ஜூலை 24ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடைபெறும் இந்த முகாமில் மின் நுகர்வோர்கள் தங்களுக்கு உரிய ஆவணங்களுடன் கட்டணம் 708 ரூபாய் சமர்ப்பித்து மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் சிறப்பு முகாம் ஜூலை 24 முதல் ஒரு மாதம் வரை அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடத்தப்படும் எனவும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை தினம் தவிர்த்து அனைத்து வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேவையான ஆவணங்களுடன் அலுவலகத்தில் நேரில் அல்லது இணையதளத்தில் பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்.