• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சத்திய சோதனை திரை விமர்சனம்

Byஜெ.துரை

Jul 21, 2023

சுரேஷ் சங்கையா இயக்கத்தில் பிரேம்ஜி நடிப்பில் வெளி வந்த திரைப்படம் சத்திய சோதனை

ஸ்வயம் சித்தா,சித்தன் மோகன், செல்வ முருகன், ஞானசம்பந்தம், ரேஷ்மா, கர்ணராஜ், ஹரிதா, ராஜேந்திரன், ஆகியோர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் நாயகன் பிரேம் ஜி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்க்கிறார் உடனே அந்த உடலை ஒரு ஓரமாக இழுத்து வைக்கிறார் அந்த உடலில் இருக்கும் கைகடிகாரம், கைப்பேசி மற்றும் சிறிய தங்க செயின் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்க செல்கிறார்.

அதே சமயம் காவல் நிலையத்தில் சரணடையும் கொலையாளிகள் கொலை செய்யப்பட்டவர் நிறைய தங்க நகைகளை அணிந்திருந்ததாக சொல்கிறார்கள் இதனால் அப்பாவி பிரேம் ஜி மீது சந்தேகப்படும் காவல்துறை மற்ற நகைகள் எங்கே? என்று கேட்டு அவரிடம் அதிரடியாக விசாரணை நடத்த இறுதியில் அந்த தங்க நகைகள் என்ன ஆனது? அப்பாவியான பிரேம் ஜி-யை சட்டம் என்ன செய்தது? என்பது படத்தின் கதை.

பிரதீப் என்ற அப்பாவித்தனமான கதாபாத்திரத்தில் நடிகராக அல்லாமல் பிரதீப்பாக வாழ்ந்து கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார் பிரேம் ஜி.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்வயம் சித்தாவுக்கு ஒரு பாடல் சில காட்சிகள் என்று வந்து செல்கிறார்.

காவலர்களாக நடித்திருக்கும் சித்தன் மோகன் மற்றும் செல்வ முருகன் இருவரும் படத்தின் மற்றொரு ஹீரோக்களாக வலம் வருகின்றனர்

இவர்களுடைய முட்டாள்தனத்தால் காவல்துறை படும்பாடு சிரிப்பு சரவெடியாக வெடிக்கிறது குறிப்பாக இவர்களின் வசன உச்சரிப்பு மற்றும் இயல்பான நடிப்பு கதைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது

நீதிபதியாக நடித்திருக்கும் ஞானசம்பந்தம் உண்மையான குற்றவாளிகளை பிடிக்காமல் தவறே செய்யாதவர்களை பிடித்து அவர்களிடம் வசூல் செய்யும் காவலர்களை கலாய்க்கும் விதம் சிறப்பு

பிரேம் ஜி-யின் அக்காவாக நடித்திருக்கும் ரேஷ்மா, மாமாவாக நடித்திருக்கும் கர்ணராஜ், பெண் போலீஸாக நடித்திருக்கும் ஹரிதா, போலீஸ் இன்பார்மராக நடித்திருக்கும் ராஜேந்திரன், நீதிபதிக்கே உத்தரவு போடும் பாட்டி என அனைத்து நடிகர்களும் மிக எதார்த்தமாக நடித்துள்ளனர்

ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது

ரகுராம்.எம்-ன் இசையில் பாடல்கள் அனைத்து வரிகளும் புரியும்படியும் இருக்கிறது

பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணிக்கிறது

வெங்கட் ராஜனின் படத்தொகுப்பு சிறப்பு

காவல்துறை ஒரு குற்றத்தை எப்படி கையாளுகிறது குற்றவாளிகளையும் நிரபராதிகளையும் எப்படி நடத்துகிறது
ஒரு வழக்கை கையாள தெரியாத சில காவலர்களால் நீதித்துறை எப்படி திண்டாடுகிறது போன்ற அனைத்தையும் நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்

மொத்தத்தில் சத்திய சோதனை வயிறு குலுங்க சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.