• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது..

Byஜெ.துரை

Jun 22, 2023

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் உலகநாயகன் கமலஹாசனை வைத்து இயக்குனர் சங்கர் இயக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு நான்காவது நாளாக இந்திய தேசிய கொடியுடன் தொடங்கியது.

உலக நாயகன் கமலஹாசனை வைத்து இயக்குனர் சங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.

கழிவறைப்பகுதியில் பதுங்கி இருப்பவர்களை தேடுவது பிடிப்பது போன்ற காட்சிகள் இரண்டு நாட்களாக காட்சிப்படுத்தப்பட்டன.

விமான நிலையத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட பயணிகள் வெளிநாட்டவர்கள் தீவீரவாத தாக்குதலில் இருந்து தப்பிச் செல்வது போன்ற உச்ச கட்ட காட்சியின் சூட்டிங் நடைபெறுகிறது.

புறப்பாடு பகுதியில் நான்கு பந்தல்கள் ஷூட்டிங்க்காக போடப்பட்டுள்ளது.

விமான நிலையப் பகுதியில் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் நடைபெறுவதால் காவல்துறையினரின் பாதுகாப்பும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையப் பகுதியில் படப்பிடிப்பு நடத்துவதற்கு 1 கோடியே 24 லட்சம் விமான நிலைய நிர்வாகத்திற்கு ஏற்கனவே பட தயாரிப்பு நிறுவனமான லைகா செலுத்தி அனுமதி பெற்றுள்ளது.

இன்னும் ஒரு வாரம் வரை இந்தியன்2 படத்தின் படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மூவர்ண கொடியான இந்திய தேசியக் கொடியை மையமாக வைத்து இன்று படப்பிடிப்பானது நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பானது இயக்குனர் சங்கர் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.