• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பாரதி கணேஷ் 24 வருடங்கள் கழித்து இயக்கும் குழந்தைகள் படம்

விஜயகாந்த், சிம்ரன், கரண் நடித்த ‘கண்ணுபட போகுதய்யா’ படத்தை இயக்கியவர் பாரதி கணேஷ். 1999ம் ஆண்டு இந்த படம் வெளியானது. அதன்பிறகு சில படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். தற்போது 24 ஆண்டுகளுக்கு பிறகு சிறுவர்கள் படம் ஒன்றை இயக்குகிறார். இதில் ஷாம் நாயகனாக நடிக்கிறார். வாரிசு படத்திற்கு பிறகு ஷாம் நடிக்கும் படம் இது.இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். ராதாரவி, சந்தானபாரதி, திருக் குமரன் அஜய் , ஆஷிகா யாஷ், மானஸ்வி , ஷிவானி ஹரிகுமார், ஆகியோர் நடிக்கின்றனர். படம் பற்றி பாரதி கணேஷ் கூறியதாவது: இன்றைய 5ஜி ஜெனரேஷன் காலகட்டத்தில் இருக்கும் குழந்தைகளின் மனநிலை, அறிவு, ஆற்றல் செயல்பாடுகள் மற்றும் இன்றைய சமூக சூழ்நிலைகள், வாழ்வியலின் பார்வை பற்றிய உணர்வுப்பூர்வமான கருத்தினை விளக்கும் ஒரு பதிவாக சென்னை சிட்டியில் நடக்கும் ஒரு நல்ல கதையம்சத்துடன் இந்தப்படம் தயாராகி வருகிறது. என்றார்.