• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இந்தியாவின் முதல் தபால்காரர் பற்றிய படம் ஹர்காரா

கலர்புல் பீட்டா மூவ்மென்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில், உருவாகும் படம் ‘ஹர்காரா’. ‘வி1 மர்டர் கேஸ்’ என்ற படத்தில் நடித்த ராம் அருண் காஸ்ட்ரோ நடித்து, இயக்குகிறார். மற்றொரு நாயகனாக காளி வெங்கட் நடிக்கிறார். நாயகியாக கௌதமி நடிக்கிறார். பிச்சைக்காரன் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். பிலிப் சுந்தர், லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்கிறார்கள். ராம் சங்கர் இசை அமைக்கிறார். இந்தியாவின் முதல் போஸ்ட்மேன் எனும் டேக்லைனுடன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

படம் பற்றி ராம் அருண் காஸ்ட்ரோ கூறியதாவது: இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதையைச் சொல்லும் பின்னணியில் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. தற்காலத்தில் டிஜிட்டல் வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு மலைக்கிராமத்திற்குச் செல்லும் போஸ்ட்மேன் அங்குப் படும் அவஸ்தையும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையும், பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இந்தியாவின் முதல் போஸ்ட்மேன் பற்றிய எபிஸோடும் படத்தில் உள்ளது. முழுக்க முழுக்க தேனி அருகில் மலைக் கிராமங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. என்றார்.