• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மதுரை அருகே பள்ளி வளாகத்தில் 4 வயது புள்ளிமான் மீ்ட்பு

ByKalamegam Viswanathan

May 30, 2023

மதுரை அவனியாபுரம் பொட்டக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே 4 வயது புள்ளிமான் சிக்கியது அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்து புள்ளி மானை பாதுகாப்பாக மீட்டனர்.


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அரசு மேல்நிலைப் பகுதியில் புள்ளிமான் இருப்பதாக அந்த தகவலை அடுத்து அவனியாபுரம் காவல் துறையினர் அவனியாபுரம் பொட்டக்குளம் பகுதியில் தேடி வந்தனர் அப்போது அருகில் உள்ள.மாருதி ஸ்பின்னர்ஸ் எனும் தனியார் நூற்பாலை வளாகத்தில் புகுந்தது. இதனையடுத்து ‘தனியார் நிறுவன வளாக கதவை மூடி மானை பத்திரமாக பிடித்து கால்களை கட்டினர் . போலீஸார தொடர்ந்து வனத்துறை வந்து புள்ளி மானை பத்திரமாக மீட்டனர்
நகர்ப்புற பகுதியான அவனியாபுரம் பகுதியில் நான்கு வயது புள்ளிமான் சிக்கியது பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது….