• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சரக்கு வாகனத்தின் பின்னால் அதிவேகமாக வந்த டூவிலர் மோதி விபத்து..வீடியோ

Byதன பாலன்

May 18, 2023

தனக்கன்குளம் அருகே வேகத்தை குறைப்பதற்காக போடப்பட்டிருந்தார் தடுப்பு கம்பியை, மெதுவாகக் கடந்த சரக்கு வாகனத்தின் பின்னால் அதிவேகமாக வந்த டூவிலர் மோதி விபத்துக்குள்ளான உள்ளது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் நேற்று இரவு ன திருமங்கலம் நோக்கி இருவர் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர்.


அப்போது தனக்கன்குளம் அருகே அதிவேகமாக செல்லும் வாகனத்தை வேகத்தை குறைப்பதற்காக சாலை நடுவே போடப்பட்டுள்ள தடுப்பு கம்பியை கடப்பதற்காக கார் மற்றும் சரக்கு வாகனம் மெதுவாக சென்று கொண்டிருந்தது.அப்போது அதிவேகமாக திருப்பரங்குன்றத்தில் இருந்து திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த டூ வீலர் தடுப்பு கம்பியை கடப்பதற்காக மெதுவாக சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் டூவீலரில் வந்த இருவரும் சம்பவ இடத்திலே கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையானது மேற்கொண்டு வருகின்றனர்.