• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை விமான நிலையம் குறித்து இந்திய விமான நிலைய ஆணையம் அதிர்ச்சியூட்டும் பதில்.!

ByKalamegam Viswanathan

May 12, 2023

மதுரை விமான நிலையத்தில் 2022- 23 ஆண்டு உள்நாட்டு . வெளிநாட்டு பயணிகள் 11: லட்சத்து 38 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். விமான நிலைய விரிவாக்க பணிக்காக இரண்டு நீர்நிலை நிலப்பரப்பு இடம் தமிழக அரசாங்கத்திடம் நிலுவையில் உள்ளது; நிலத்தை ஒப்படைத்த பின்னரே விமான ஓடுதள விரிவாக்கப் பணிகள் நடைபெறும் – RTI தகவல் மூலம் கேள்வி எழுப்பியதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் அதிர்ச்சியூட்டும் பதில்.!
மதுரை விமான நிலையத்தின் ஓடுதள விரிவாக்க பணியின் நிலை என்ன எப்பொழுது நிறைவடையும் என்ற கேள்விக்கு

  • மதுரை விமான நிலையத்தில் ஓடுதள விரிவாக்க பணிக்காக தேவையான இரண்டு நீர்நிலை நிலப்பரப்பு இடங்களை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்து இன்னும் ஒப்படைக்கவில்லை ஒப்படைத்த பின்னரே விமான ஓடுதள பணிகள் மேற்கொள்ளப்படும் என RTI கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய விமான நிலைய ஆணையம் பதில் அளித்துள்ளது
    மதுரை விமான நிலைய கட்டுப்பாட்டு மைய விரிவாக்க பணிகள் நிலை என்ன? எப்பொழுது முடிவடையும் என்ற கேள்விக்கு
  • மதுரை விமான நிலைய கட்டுப்பாட்டு மைய விரிவாக்க பணிகள் இன்னும் திட்டம் வகுக்கப்படும் நிலையிலேயே உள்ளது என்றும்‌.
    மதுரை விமான நிலையம் ஏப்ரல் 2023 முதல் 24 மணி நேரம் செயல்படும் விமான நிலையமாக மாற்றக்கூடிய திட்டம் உள்ளதா? என்ற கேள்விக்கு
  • மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவைக்கான திட்டம் தற்காலிகமாக தற்போது வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது – 24 மணி நேரம் மதுரை விமான நிலையம் செயல்படுவதற்காக புதிய விமானங்கள் இயக்கப் பட வேண்டி உள்ளது இதற்காக விமான சேவை நிறுவனங்களுடன் அறிக்கை பெறப்பட்டுள்ளது என ஆணையம் பதில் அளித்துள்ளது.
    மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்துவதற்குரிய திட்டத்தின் நிலை என்ன? என்ற கேள்விக்கு
  • மதுரை விமான நிலையத்தை தரம் உயர்த்தி சர்வதேச விமான நிலையமாக மாற்றுவது மத்திய அரசின் நோக்கமாக உள்ளது.
    மதுரை விமான நிலையத்தில் 2022 முதல் 2023 வரை பயணித்த பயணிகளின் எண்ணிக்கை எவ்வளவு? என்ற கேள்விக்கு
  • 2022 முதல் 2023 வரை மதுரை விமான நிலையத்தை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை 11,38,928 ஆகும் என RTI மூலம் விமான நிலைய ஆணையம் பதில் அளித்துள்ளது.