• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

விராட் கோலிக்கு ரூ.1 கோடி ரூபாய் அபராதம்

ByA.Tamilselvan

May 2, 2023

ஐபிஎல் நன்னடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று கோலியும் கம்பீரும் மோதிக்கொண்டதில் விராட்கோலிக்கு ரூ 1கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ, பெங்களூர் அணிகள் மோதிய ஆட்டம் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் முடிவடைந்தது. லக்னோ அணி, இந்த ஆட்டத்தில் 108 ரன்களில் தோல்வியில் தழுவியது. மேலும் ஆட்டத்தின் முடிவில் விராட் கோலியும், கம்பீரும் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆட்டம் முடிந்ததும் கைகுலுக்கும் போது நவீன் உல் ஹ்க் விராட் கோலியிடம் ஏதோ பேசினார். அதற்கு விராட் கோலி பதிலடி கொடுக்க என சண்டை தொடங்கியது. பிறகு கெயில் மேயர்ஸ் விராட் கோலி இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததை கண்ட கம்பீர் அவரை அழைத்துச் சென்றார். இதனால் கடுப்பான விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை அடுத்து இருவரும் மோதிக் கொள்ளும் நிலைக்கு சென்றனர். மோதல் தொடங்கிய இடம் எது ? யார் காரணம் ? அப்போது அங்கு இருந்த சக அணி வீரர்கள் இருவரையும் விலக்கி விட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது ஐபிஎல் நன்னடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று கோலியும் கம்பீரும் தங்கள் தவறை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இதனால் விராட் கோலிக்கு 100% போட்டியின் ஊதியத்திலிருந்து அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது