• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மதுரை அருகே கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்களால் பரபரப்பு

ByKalamegam Viswanathan

May 2, 2023

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கிராம சபை கூட்டம் நடத்தி எந்த பயனும் இல்லை என்றும் ஆகையால் கூட்டத்தை புறக்கணிப்பதாக பொதுமக்கள் புறக்கணித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் செமினிப்பட்டி ஊராட்சியில் தனியார் அட்டை கம்பெனிக்கு அனுமதி அளித்த ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் இதற்கு முன்பு நடைபெற்ற ஐந்து கிராம சபை கூட்டங்களிலும் தனியார் தொழிற்சாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் ஊராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றாததால் கிராம சபை கூட்டம் நடத்தி எந்த பயனும் இல்லை என்றும் ஆகையால் கிராம சபை கூட்டம் எங்கள் ஊராட்சிக்கு தேவை இல்லை என்றும் கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்து கிராமசபை கூட்டத்தை புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது மேலும் ஏற்கனவே இது குறித்து யூனியன் ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் பல போராட்டங்கள் நடத்தியும் எந்த பலனும் இல்லாததால் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்ததாக தெரிவித்துள்ளனர் மேலும் இதுகுறித்து முறையாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மீண்டும் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்…