• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு _ தமிழிசை பதில்

Byp Kumar

Apr 25, 2023

புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை மக்கள் விரோத நடவடிக்கையில் மத்திய அரசு என்றைக்கும் செயல்படாது தவறாக பிரச்சாரம் செய்கின்றனர் .அதானி குழுமத்துடன் இணைந்து மத்திய அரசு நிலத்தை கையப்படுத்துவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு _ தமிழிசை பதில்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள அன்னை பாத்திமா கல்வி குடும்பத்தின் 17 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது இதில் தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்று மாணவ மாணவியர்களுக்கு வட்டங்களை வழங்கினார் பட்டங்களை வழங்கிய ஆளுநர் தமிழிசை தொடர்ந்து மாணவர்களிடம் உரையாற்றிய போது இன்று பட்டம் பெறும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று பட்டம் பெறும் மாணவர்கள் கடினமாக உழைத்து உள்ளார்கள். என்னை போன்றவர்கள் மேடையில் நிற்கிறோம் என்றால் அதற்கு காரணம் ஆசிரியர் பெருமக்கள் தான் எனது ஆசிரியர்களுக்கு கொடுக்கும் மரியாதையை நான் எல்லா ஆசிரியருக்கும் கொடுக்கிறேன். இந்த காலகட்டத்தில் மாணவர்களாக இருப்பது ஆசிரியர்களாக இருப்பது சவாலான சூழ்நிலைதான் அதுவும் கொரோனா காலத்தில் கொரோனா என்ற பெருந்தொற்றை வெற்றி கொண்டு இன்று நீங்கள் எல்லாம் வெற்றிகரமாக பட்டம் வாங்குகிறீர்கள் என்றால் நீங்கள் எல்லாம் பாராட்டுக்குரியவர்கள். உங்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன் இந்த நாடு கொடுத்திருக்கிற கல்வி ஆற்றல் தான் நம்மையெல்லாம் பெரிய மனிதர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. பட்டமளிப்பு விழாவில் ஒவ்வொரு விழாவிலும் ஏதாவது ஒரு கருத்தை மாணவர்களுக்கு தெரிவித்து வருகிறேன். நான் எப்போதும் மாணவர்கள் எதை விரும்புகிறார்கள் அவர்களுக்கு எதை சொல்ல வேண்டும் என்ற கருத்தோடு தான் பேசுவது வழக்கம். சுதந்திரம் அடைந்து 75 ஆவது ஆண்டு காலத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் இன்று நாமெல்லாம் வசதியாக படித்து பட்டம் பெறும் வயதில்தான் நம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் எல்லாம் சுதந்திர வேள்வியில் குதித்து சிறைச்சாலை தண்டனைகளை அனுபவித்து அவர்களால்தான் நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.
அவர்களுக்கு இந்த 75 ஆவது ஆண்டு விழாவில் நாம் நன்றியை தெரிவித்துக் கொள்வோம் கல்லூரிகளில் நான் வைக்கும் கோரிக்கை நன்றாக படியுங்கள் நான் சொல்வது அதிகமாக புத்தகங்களை படியுங்கள் வரலாற்றுப் புத்தகம், நல்ல புத்தகங்களை தேடி தேடி படியுங்கள் புத்தகங்களை படிக்க படிக்க தான் நம் வாழ்க்கை முறை தெளிவாகும் என்றார். புத்தகத்திற்கு என்று உங்கள் வீட்டிலும் நாட்களிலும் வேலை நேரத்திலும் புத்தகங்களை படியுங்கள் புத்தகங்களை படிக்க படிக்கத்தான் வாழ்வு மேம்படும் என்பது மட்டுமல்ல சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றி அதிகம் படியுங்கள் என தெரிவித்தார். தற்போது இந்தியாவை சேர்ந்த திறமை வாய்ந்தவர்கள் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க பிரதமர் இன்று புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி இருக்கிறார். வேறொரு மொழியை கற்றுக் கொண்டால் தமிழ் மொழியில் தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என்று தமிழகத்தில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் பலமொழிகள் கற்கும் பொழுதுதான் தமிழ் எவ்வளவு உயர்ந்தது என்று தெரியும் பாரதி பல மொழிகளை கற்றுக் கொண்டுதான் தமிழ் உயர்ந்தது என்று சொன்னார்.ஆனால் இன்று தமிழை மட்டும் கற்றுக்கொண்டு தமிழை பாதுகாக்கிறோம் என்று சொல்பவர்கள் மாநிலத்தில் மட்டும்தான் எங்களது ஆளுமை இருக்க வேண்டும் என்று மொழியை கூட அனுமதிக்காதவர்கள் இன்று சமூக நீதியை பற்றி பேசி வருகிறார்கள். இங்குமொழி, தொழில்,விஞ்ஞானம் எல்லாம் அரசியலாக்கப்படுகிறது. மாணவர்கள் அதிகமாக அரசியலுக்கு வர வேண்டும் அதிகமாக தலைவர்கள் உருவாக வேண்டும் படித்தவர்கள் அரசியலுக்கு வர வரத்தான் நாடு முன்னேற்றம் அடையும். நானும் பேராசிரியராக இருந்து தான் அரசியலுக்கு வந்துள்ளேன். எதையுமே அரசியல் ஆக்காமல் ஒரு திட்டம் வந்தால் அதை அலசி ஆராய்ந்து நல்லவற்றை எடுத்துக் கொள்வது என்பதுதான் புதிய கல்விக் கொள்கையை வரவேற்கும் நிலை உங்களிடம் இருக்க வேண்டும் என்பதுதான்.ஆறு மாதம் தாய்ப்பால் மட்டும் தான் கொடுக்க வேண்டும் அப்போதுதான் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி வரும் அதைத்தான் பாரத பிரதமர் சொல்கிறார் ஆரம்பத்தில் இருந்து தாய்மொழிக் கல்வியை கொடுங்கள் என்று சொன்னார் தமிழை மட்டும் ஆட்சி மொழியாக கொண்டு செயல்படுவேன் என்று சொல்பவர்கள் தாய் மொழியை கட்டாயமாகவில்லை. வாய்ப்புகள் அதிகம் வர வேண்டும் என்றால் பிற மொழிகளையும் கற்றுக் கொள்வதில் தவறில்லை. பல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் நன்றாக படியுங்கள் என்றார்.


தொடர்ந்து பேசிய தமிழிசை சவுந்தர்ராஜன். எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தாலும் மகிழ்ச்சியை மட்டும் தொலைத்து விடாதீர்கள் மாணவர்கள் செல்வங்கள் ஒவ்வொரு நாளும் உங்களை புதுப்பித்துக் கொள்ளுங்கள் தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்துங்கள் செல்போனை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் செல்போனை ஆக்கபூர்வமாக பயன்படுத்துங்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்த நமக்கு நேரம் குறைவாகும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டு இயற்கையை நாம் ரசிப்பது கிடையாது மகிழ்ச்சி அடைவது கிடையாது நாளை முதல் மாலை வரை நேரத்தை திட்டமிடுங்கள் அன்றைய நாள் பயனுள்ளதாக இல்லை என்றால் நான் கவலைப்படுவேன். எனது பயனுள்ள நாட்களில் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டதும் ஒரு முக்கியமான நாளாக குறிப்பிடுகிறேன் என தெரிவித்தார். நாளும் நாளும் வளர்வோம் நாட்டிற்கு சேவை செய்வோம் என்றார். யோகா பயிற்சியை தினமும் செய்து இருந்தால் இன்று வாங்கிய மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண்கள் பெற்று இருக்கலாம் யோகா செய்தால் மனம் ஒருநிலைப்படும் என தெரிவித்தார். யோகா செய்யாத நாள் இன்றோடு கடைசி நாளாக இருக்கட்டும் நாளை முதல் சின்ன சின்ன யோகாவை செய்யும் முயற்சியுங்கள் யோகா என்பது உடலுக்கும் நல்லது உள்ளத்திற்கும் நல்லது யோகா போன்ற நல்ல கலைகளை நம் நாட்டு கலைகளை கற்றுக் கொள்வோம் அதேபோல் ஒவ்வொரு நாளும் நம்மை உயர்த்திக் கொளவோம் என தெரிவித்தார்.
விழாவில் கல்லூரி தாளாளர் எம் எஸ் சார் செயலாளர் மற்றும் கல்லூரி முதல்வர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பிறை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் புதுச்சேரி மக்களின் சொத்துக்களை அதனை குடும்பத்துடன் இணைந்து மத்திய அரசு கையகப்படுத்த நினைப்பதாகவும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இந்த விஷயத்தில் மௌனம் காத்து வருவதாகவும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு சட்டத்திற்கு புறம்பாக எதுவும் நடக்காது மக்களுக்கு விரோதமாக எந்த தவறும் நடக்கவில்லை புதுச்சேரி முதல்வரும் அதை ஒப்புக்கொள்ள மாட்டார் என தெரிவித்தார்.