• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள படம் ‘எமர்ஜென்சி

Byதன பாலன்

Apr 23, 2023

இந்திரா காந்தி இந்திய பிரதமராக பதவி வகித்த 1975 – 1977 காலகட்டத்தில் இந்தியாவில் அவசரகால சட்டம் (எமர்ஜென்சி அல்லது மிசா) அமல்படுத்தப்பட்டது. அரசாங்கத்தை எதிர்த்து போராடிய கட்சிகளை சார்ந்த தலைவர்கள் பிணையில் வர முடியாதபடி கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
இந்த சட்டத்தின்படி அரசியலமைப்பு சட்டம் குடிமகனுக்கு வழங்கியுள்ள பேச்சுரிமை, எழுத்துரிமை இரண்டும் நிறுத்திவைத்தப்பட்டன. அரசு எந்திரங்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக நியாயம் கேட்டு முறையிடவோ, நீதிமன்றத்தில் வழக்கு தொடரவோ முடியாது.எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற அரசியல்நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள எமர்ஜென்சி படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார்.ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இப்படத்தின் முதல் பார்வை மற்றும் முன்னோட்டம்அண்மையில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அமைக்கும் பணியில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஈடுப்பட்டுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “கங்கனா ரணாவத்தின் ‘எமர்ஜென்சி’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை உருவாக்கி வருகிறேன். இந்த பிரம்மாண்டமான திரைப்படம் விரைவில் வெளிவர காத்திருக்கிறது” என்று கங்கனாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.