• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தற்கொலை நகரமாக மாறுகிறதா மதுரை? – ஆர்.டி.ஐ அதிர்ச்சி தகவல்

ByKalamegam Viswanathan

Apr 18, 2023

மதுரையில் விஷம் அருந்தி தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆர்டிஐ அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் விஷம் அருந்துபவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாவும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் பதிலளித்துள்ளது.
அதில், மதுரை மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு சுமார் 2,380 பேரும், 2022ம் ஆண்டு 2,550 பேர் என 4930 பேர் விஷ மருந்து சிகிச்சைக்காக அனுமதி அளித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த 2021 ஆண்டு 180 பேரும், 2022 ஆண்டு 207 பேரும் என உயிரிழந்துள்ளனர்.