• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சமூக நீதி, அமைதி மற்றும் சட்ட நிபுணர்கள் கூட்டமைப்பு சார்பாக கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

Byஜெ.துரை

Apr 6, 2023

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜமீன் பல்லாவரத்தில் அமைந்துள்ள சஞ்சய் காந்தி நகர் பகுதியில் வசிக்கும் மக்களின் குடியிருப்புகளை அகற்ற கூறி தமிழக அரசு நோட்டீஸ் விடுத்ததை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில்சமூக நீதி, அமைதி மற்றும் சட்ட நிபுணர்கள் கூட்டமைப்பு சார்பாக கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஜமீன் பல்லாவரம் சஞ்சய்காந்தி நகர் பகுதியில் சுமார் 3000 குடும்பத்திற்கு மேலாக 50 ஆண்டு காலமாக அப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் குடியிருப்பு பகுதியை அகற்றக்கோரி தமிழக அரசு நோட்டீஸ்அனுப்பி உள்ளது இதை கண்டித்து சமூக நீதி, அமைதி மற்றும் சட்ட நிபுணர்கள் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஜோசப் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்த பகுதியில் வசிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட அநேகம் பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.