• Mon. Sep 28th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கோயிலை இடித்து தரைமட்டம் ஆக்கிய நபர்கள் மீது நடவடிக்கை -ஊர் மக்கள் மனு

150 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வழிபட்டு வரும் குலதெய்வ கோயிலை இடித்து சாதி குறித்து இழிவாக பேசியதால் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை காவல் கண்காணிப்பாளரிடம் ஊர்மக்கள் மனு கொடுத்துள்ளனர்
சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த காட்டுக்கோட்டை நேரு நகர் பகுதியில் 150 ஆண்டுகளுக்கு மேலாக பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் பட்டியலின மக்களுக்கு சொந்தமான குலதெய்வ திருக்கோயில் அமைந்துள்ளது அந்த கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா நடத்தி வழிபட்டு வந்தனர் இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சத்தியசீலன் பரிமளா ஆகிய ஆதிக்க சாதியினர் திருக்கோயில் தங்களுக்கு சொந்தமானது என்றும் அந்த பகுதியில் யாரும் நுழையக்கூடாது என்று கம்பி வேலி அமைத்து கடந்த வியாழக்கிழமை இரவு ஜெசிபி இயந்திரம் மூலம் கோவிலை இடித்து தரைமட்டம் ஆக்கியதாக கூறப்படுகிறது.


இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி அந்த பகுதியை சேர்ந்த பட்டியல் இன சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் ஆண்டாண்டு காலமாக வழிபட்டு வந்த குலதெய்வ திருக்கோவிலை இடித்து தரைமட்டம் ஆகிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சாதி பெயரை சொல்லி திட்டியவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் மனு வழங்கினர்.