• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சத்தீஸ்கரில் அமலாக்கப்பிரிவு ரெய்டு..!

Byவிஷா

Feb 20, 2023

சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று காலை முதல் காங்கிரஸ் நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இன்று காலை முதல் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
நிலக்கரி ஒதுக்கீட்டில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக புகார் வெளியானதையடுத்து, இந்த சோதனை நடப்பதாக அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சத்தீஸ்கவரில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக பூபேந்திர பாகெல் உள்ளார். காங்கிரஸ் கட்சியின் 3 நாட்கள் செயற்குழுக் கூட்டம் வரும் 24 முதல் 26ம் தேதிவரை ராய்பூரில் நடக்க இருக்கிறது. இந்த நேரத்தில் அங்கு அமலாக்கப்பிரிவு ரெய்டு நடந்துள்ளது.
அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “காங்கிரஸ் நிர்வாகிகள் நிலக்கரி ஒதுக்கீட்டில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் ஈடுபட்டதாக புகார் எழுந்ததையடுத்து காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளோம். எம்எல்ஏ தேவேந்திர யாதவுக்கு சொந்தமான 12 இடங்களில ரெய்டுநடக்கிறது.
சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கமிட்டி பொருளார் ராம்கோபால் அகர்வால், மாநில கட்டுமான மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் தலைவர் சுஷில் சன்னி அகர்வால், செய்தித்தொடர்பாளர் ஆர்பி சிங் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களிலும் ரெய்டு நடக்கிறது. இது தவிர ஆளும் கட்சி நிர்வாகிகள் சிலரின் வீடுகளிலும் ரெய்டு நடக்கிறது. நிலக்கரி ஒதுக்கீட்டில் யாரெல்லாம் பயன் அடைந்தார்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு சோதனை நடக்கிறது” எனத் தெரிவித்தன
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுஷில் ஆனந்த் சுக்லா கூறுகையில்” காங்கிரஸ் கட்சியின் 85வது செயற்குழுக் கூட்டத்தைப் பார்த்து பாஜக அஞ்சுகிறது, அதற்கு இடையூறு செய்யவே அமலாக்கப்பிரிவு மூலம் ரெய்டு நடத்துகிறது. பாஜக தோல்வி அடையும்போதெல்லாம், எதிர்க்கட்சிகள் மீது அமலாக்கப்பிரிவு, சிபிஐ அமைப்புகளை ஏவி விடுகிறது. இந்த ரெய்டுக்கு எதிராக காலை 11 மணிக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகம்முன் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்துவார்கள்” எனத் தெரிவித்தார்.
அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “ நிலக்கரி வெட்டிஎடுத்தலுக்கு டன்னுக்கு ரூ.25 சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மூத்த அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியல்தலைவர்கள், இடைத்தரகர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை ஐஏஎஸ் அதிகாரி சவுரேஸ்யா, சூர்யகாந்த் திவாரி, அவரின் மாமா லட்சுமிகாந்த் திவாரி, ஐஏஎஸ்அதிகாரி சமீர் வைஷ்னோய், நிலக்கரி வியாபாரி சுனில் அகர்வால் ஆகியோர் இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டது.