• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

நான் மும்பையில் பிறந்தாலும் தமிழச்சி தான்- குஷ்பு பேட்டி

ByA.Tamilselvan

Jan 8, 2023

தமிழ்நாட்டில் 36 ஆண்டுகளா உள்ளேன் நான் மும்பையில் பிறந்தாலும் தமிழச்சி தான் என குஷ்பு பேட்டி
கோவை மாவட்ட பாஜக சார்பில் நம்ம ஊர் பொங்கல் திருவிழா வெள்ளலூரில் இன்று நடைபெற்றது. இதில் பாஜக தேசியக்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கலந்து கொண்டு பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்தார். பொங்கல் திருவிழாவையொட்டி அங்கு நாட்டுபுற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “பொங்கல் பண்டிகை நம்முடைய பாரம்பரிய பண்டிகையாகும். இது வீட்டிலும், குடும்பத்திலும் சந்தோஷம் கொடுக்கக் கூடிய பண்டிகையாகும். இந்த பண்டிகையை இங்கு நான் மக்களுடன் சேர்ந்து உற்சாகமாக கொண்டாடி உள்ளேன். இது மகிழ்ச்சியாக உள்ளது.
தமிழக அரசு பொங்கல் பரிசாக மக்களுக்கு ரூ.1000 மட்டுமே கொடுப்பது வெட்கக்கேடானது. தமிழ் கலாசாரத்தை பாதுகாப்பதாக கூறி வரும் திமுக அரசு இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ளக்கூடாது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரையில் கமல்ஹாசன் கலந்து கொண்டது அவரது கட்சியின் தனிப்பட்ட உரிமையாகும். அதில் கருத்து சொல்ல முடியாது. பாஜகவில் எல்லா பெண்களும் கட்சியை விட்டு போகவில்லை. ஒரு சிலர் போவதால் பாதுகாப்பு இல்லை என்று கூறமுடியாது. பாஜகவில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்கிறது. நானும் கட்சியில் தானே இருக்கிறேன்.
தற்போதைய தலைவர் அண்ணாமலை துணிச்சலான தலைவர். துணிச்சலாக பல முடிவுகளை எடுத்து வருகிறார். அவரை பாராட்டுகிறேன். தமிழகம், தமிழ்நாடு என்று சொல்வதால் எந்த தவறும் இல்லை. நான் மும்பையில் பிறந்தாலும் தமிழச்சி தான். 36 ஆண்டுகளாக தமிழகத்தில் தான் உள்ளேன்” என்று அவர் கூறினார்.