• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படாதீர்கள் ….என்ஜாய் – விமர்சனம்

Byதன பாலன்

Dec 23, 2022

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படாதீர்கள் எனும் நல்ல கருத்தைச் சொல்லியிருக்கிறது எனஜாய் திரைப்படம்.
வாழ்க்கையை அனுபவிக்கத் துடிக்கும் இளைஞர்கள்,அடித்தட்டு மற்றும் நடுத்தட்டு வாழ்க்கையில் இருக்கும் கல்லூரிமாணவிகள், அந்த மாணவிகளின் ஆசையை மூலதனமாகக் கொண்டு வியாபாரம் செய்யும் மனிதர்கள் ஆகியோரை வைத்துப் பின்னப்பட்டிருக்கும் திரைக்கதையைக் கொண்ட படம் என்ஜாய்.வசதியான வீட்டுப் பையன்களாக மதன்குமார், டான்சர் விக்னேஷ், ஹரீஷ்குமார் ஆகியோர் வருகிறார்கள்.
கல்லூரி மாணவிகளாக வரும் நிரஞ்சனா, ஜீ.வி.அபர்ணா,ஹாசின் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.மூன்று இளைஞர்களில் மதன்குமாரின் காதலியாக சாய்தன்யா வருகிறார்.எல்லோரும் அவரவர் பாத்திரத்தை உணர்ந்து நடிக்க முயன்றிருக்கிறார்கள்.காவல்துறை ஆய்வாளராக பில்லிமுரளி,உல்லாசவிடுதி முதலாளியாக காலாட்படை ஜெய்,உல்லாசத்துக்காகவே அலையும் யோகிராம் ஆகிய கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு கதையை நகர்த்துகிறார் இயக்குநர்.கொடைக்கானல் மற்றும் கல்லூரி விடுதிக்காட்சிகளளை எதார்த்தமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கே.என். அக்பர் கே.எம்.ரயான் இசையில் பாடல்கள் கேட்கலாம்.சபேஷ் முரளியின் பின்னணி இசை கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது. அதிலும் இரட்டை அர்த்தக் காட்சிகளில் பின்னணி இசையிலும் அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.
பெருமாள்காசி எழுதி இயக்கியிருக்கிறார். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படாதீர்கள் எனும் நல்ல கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
படம் நெடுக இரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகளை வைத்துவிட்டு கடைசியில் வன்முறை கூடாது என்கிற கருத்தைச் சொல்வது போல படம் முழுக்க இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள் சில இடங்களில் நேரடியாகவே ஆபாச வசனங்கள் மற்றும் காட்சிகளை வைத்துவிட்டுக் கடைசியில் இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்கிறார்