• Tue. Jun 2nd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

மதுரையில் ஆதி தமிழர் கட்சியினர் போராட்டம்

Byp Kumar

Dec 19, 2022

மதுரையில் மயான பாதை விவாகரத்தில் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆதி தமிழர் கட்சியினர் போராட்டம்
மதுரை பேரையூர் அருகே சின்னமலைப்பட்டி மயானப் பாதை அமைத்து தர வேண்டும் என 17 ஆம் தேதி போராட்டம் நடத்திய ஆதி தமிழர் கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அதில் அக்கட்சியை சேர்ந்த 5 பேர் காவல்துறை வாகனத்தை சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஆதி தமிழர் கட்சியினரை விடுவிக்க வேண்டும், ஒரு தலைப்பட்டசமாக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், மயான பாதைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 22 இலட்சம் ரூபாய் நிதி குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், 25 ஆண்டுகால மயான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி ஆதி தமிழர் கட்சியின் நிறுவனர் ஜக்கையன் தலைமையில் 100 க்கும் மேற்பட்டவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டம் நடத்தினார்கள், பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.