• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை நுகர்பொருள்&ஷாப் மொத்த வியாபாரிகள் சங்க 69 வது ஆண்டு விழா

Byp Kumar

Dec 18, 2022

மதுரை நுகர்பொருள்&ஷாப் மொத்த வியாபாரிகள் சங்க 69 வது ஆண்டு விழாவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்
மதுரையில் அவனியாபுரம் பகுதியில் அமைந்துள்ள சங்க அரங்கத்தில் மதுரை நுகர்பொருள் ஷாப் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் குற்றலிங்கம்,செயலாளர் மோகன் பொருளாளர் இளங்கோவன் தலைமையில் மதுரை நுகர்பொருள்&ஷாப் மொத்த வியாபாரிகள் சங்க 69 வது ஆண்டு விழாவில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து உரையாற்றினார்.


இந்த நிகழ்வில் மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் , ஆகியோர் பங்கேற்றனர்.இதில் உரையாற்றிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,விமான நிலைய விரிவாக்கம் மற்றும் சர்வதேச விமான நிலையம் தொடர்பாக டெல்லியில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும், ஜி எஸ் டி விவகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேச உள்ளதாக கூறினார் .இவ்விழாவில் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை சங்கத்தின் துணைச் செயலாளர் மாரியப்பன் தமிழ்ச்செல்வன் ,செல்வராஜன்ஆகியோர் செய்திருந்தனர்