• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கவர்னருக்கு கருப்பு கோடி காட்டும் போராட்டம் -அதிமமுக தீர்மானம்

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் (அதிமமுக)வரும் டிசம்பர் 6ஆம் தேதி கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் மற்றும் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது என்று கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சே பசும்பொன் பாண்டியன் கூறினார்.
ஈரோட்டில் அதிமமுககட்சியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: கவர்னரின் சனாதன பிரச்சாரத்தை கண்டித்து முற்றுகைப் போராட்டம் மற்றும் கவர்னருக்கு கருப்பு கோடி காட்டும் போராட்டம் விரைவில் நடைபெறும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலைக்கு உதவிய முதல்வருக்கு பாராட்டு நூல் பருத்தி பால் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் தமிழர் வருடப்பிறப்பான பொங்கலுக்கு பரிசுத்தொகை ரூபாய் 2000 மக்களுக்கு வழங்க வேண்டும் மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டிக்கிறோம்.


2021 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியை வீழ்த்துவது திமுக தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி வலுப்பெற செய்வது திரைப்படங்களில் வன்முறை போதைப்பழக்கம் பெண்களுக்கு எதிரான காட்சிகளை தவிர்க்க வேண்டும் அரசு ஊழியர்கள் போக்குவரத்து தொழிலாளர்கள் மக்கள் நல பணியாளர்கள் பிரச்சனைக்கு தமிழக அரசு உடனே தீர்வு காண வேண்டும்.
தமிழ் நாடு அரசு வேலைகளில் தமிழர்களுக்கு 80 விழுக்காடு வழங்க சட்டமியற்ற வேண்டும் உயர் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்.இக் கூட்டத்தில் கழக அவைத் தலைவர் தாஜுதீன் பொருளாளர் பூங்கா பி கே மாரி, கழகத் துணைப் பொதுச் செயலாளர் எம் எஸ் முத்துக்குமார், தலைமை நிலைய செயலாளர் முரளி மாவட்டச் செயலாளர் மற்றும் உயர் மட்ட செயல் திட்ட குழு உறுப்பினர் செந்தில்குமார், மாவட்டச் செயலாளர்கள் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் அணிகளின் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.