• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

1 கோடிக்கும் அதிகமான உக்ரேனியர்கள்
மின்சாரம் இல்லாமல் உள்ளனர்:
உக்ரைன் அதிபர் வேதனை

ரஷியா நடத்திய தாக்குதல்களால், ஒரு கோடிக்கும் அதிகமான உக்ரேனியர்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. 9 மாதங்கள் ஆகியும் இந்த போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டு இருக்கிறது. இந்த சூழலில் உக்ரைன் மீது ரஷியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், ரஷியா, உக்ரைன் முழுவதும் நகரங்களைத் தாக்கி நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்பை முடக்கியதால், ஒரு கோடிக்கும் அதிகமான உக்ரேனியர்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். குறிப்பாக, ஒடெசா, வின்னிட்சியா, சுமி மற்றும் கிய்வ் ஆகியபகுதிகள் மின்வெட்டால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், மின் வினியோகத்தை சீர் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.