• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 99 வது பிறந்தநாள் விழா

BySeenu

Feb 6, 2024

கோவை எஸ். எஸ். குளம் ஒன்றியம் கொண்டையம் பாளையம் ஊராட்சி வையம்பாளையத்தில் அமைந்துள்ள உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடு அவர்களின் மணிமண்டபத்தில் அவருடைய 99 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அரசு சார்பில் கொண்டாடப்பட்ட விழாவில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா, தலைமையில் கோவை கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ், அன்னூர் தாசில்தார் நித்தில வள்ளி ஆகியோர் முன்னிலையில் வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு நாராயணசாமி நாயுடு அவர்களின் திருவுருவ சிலைமற்றும் நினைவிடத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். விழாவில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் ரவி,தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு மாவட்ட துணை செயலாளர் அசோக் பாபு ஆறுக்குட்டி, எஸ் எஸ் குளம் ஒன்றிய திமுக செயலாளர் சுரேஷ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான், மாவட்ட கவுன்சிலர் அபிநயா ஆறுக்குட்டி, எஸ் எஸ் குளம் பேரூராட்சி தலைவர் கோமளவல்லி கந்தசாமி, துணைத் தலைவர் மணி (எ) விஜயகுமார், கீரணத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ராசு (எ) பழனிசாமி, வெள்ளானப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா, துணைத் தலைவர் ராஜன், பேரூர் பகுதி கழக செயலாளர் சுரேந்திரன்,மாவட்ட பிரதிநிதி கந்தசாமி, நந்து (எ) விஜயகுமார், மோகன் ,பார்த்திபன், சுப்பையன், சண்முகம், வீரகுமார், ராமலிங்கம், மற்றும் இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் வேட்டவலம் கே மணிகண்டன் மற்றும் பல்வேறு விவசாய சங்கத்தினர் விவசாயிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.