• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வீட்டில் 9 லட்சம் பணம் கொள்ளை – போலீசார் விசாரணை

ByKalamegam Viswanathan

Oct 21, 2023

மதுரை சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சி மன்றத்தில் துணைத் தலைவராக இருப்பவர் செல்வி செல்வம். இவர் இங்கு உள்ள கருப்புகோவில் அருகே பேன்சி கடை வைத்துள்ளார். இவர் கடைக்கு விக்கிரமங்கலம் அருகே கோவில் வேலை செய்வதற்காக வந்துள்ள ஒரு பெண் இவரிடம் நட்பாக பழகி உள்ளார். மூன்று நாட்களுக்கு மேலாக இவரது கடையில் பொருட்கள் வாங்கி செல்வது போல் பழகி, உரிமையாக பேசியுள்ளார். இதை வைத்து செல்வி செல்வம் இவரின் மேல் நம்பிக்கை வைத்து கடைக்குள் அனுமதித்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண் கடைக்கு உள்ளே வந்து நோட்டமிட்டு, இவர்கள் நகை மற்றும் பணம் வைத்திருந்ததை பார்த்துள்ளதாக தெரிகிறது. பின்னர் செல்வி செல்வம் அசந்த நேரம் பார்த்து கடையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 9 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு கடையின் மற்றொரு வழியாக அந்த பெண் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து செல்விசெல்வம் தனது கடையில் ஒன்பது லட்சம் ரூபாய் திருடு போனதாக விக்கிரமங்கலம் போலீஸ்ல பயத்தில் புகார் செய்துள்ளார். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.மேலும் கடையில் அருகில் இருந்த கண் மாணிப்பு கேமரா அடிப்படையில் பணம் திருடி பெண்ணின் அந்த அடையாளங்களை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தனிப்படை அமைத்து மர்ம பெண்ணை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இவரது கடை அருகே உள்ள கனரா வங்கியில் உள்ள சிசிடிவி கேமரா புட்டேஜை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். விக்கிரமங்கலம் பகுதியில் பட்ட பகலில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கடையில் ரூபாய் ஒன்பது லட்சம் ரூபாய் பணம் திருடிய சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.