புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட அன்னச்சத்திரம் பகுதியில் ஜேஎன் நகரை சேர்ந்த கார்த்திகா இவரது கணவர் கதிரேசன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகா தனது வீட்டை பூட்டி விட்டு பெங்களூரில் உள்ள அக்காவின் குழந்தை பிறந்த நாள் விழாவிற்காக கார்த்திகா சென்றுள்ளார்.

இதனை அறிந்த கொள்ளையர்கள் பூட்டிருந்த வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 89 சவரன் தங்க நகை, 170 கிராம் வெள்ளி பொருட்கள், மற்றும் உண்டியல் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பெருங்களுரில் இருந்து நேற்று இரவு கார்த்திகா வீட்டிற்கு திரும்பிய நிலையில் வீட்டின் முன்பக்கம் கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சடைந்துள்ளார்.
இதனை அடுத்து நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தில் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா கொள்ளை நடந்த வீட்டில் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இதேபோன்று நேற்று புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பாசில் நகர் பகுதியில் முருகேசன் என்பவர் வீட்டை உடைத்து 160 சவரன் நகைகள் கொள்ளை போன சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு வீட்டில் 89 சவரன் நகைகள் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.