• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் 88 விநாயகர் சிலைகள் கரைப்பு

கடலோர காவல்படையினர் கண்காணிப்பில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில், அகஸ்தீஸ்வரம் வட்டாரம் பகுதிகளில் கடந்து 9_நாட்களாக வீடுகளில், கோவில்களில், சாலை சந்திப்புகளில் வழிபாட்டில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் எல்லாம் நேற்று (செப்டம்பர்15)ம் நாள் பிற்பகல், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில் அருகில் கொண்டு வரப்பட்ட வாகனங்கள் எல்லாம் மாலை 5மணிக்கு காவல்துறை கண்காணிப்பில் வாகனங்கள் வரிசையாக கன்னியாகுமரி நோக்கி பயணப்பட்டது.

விநாயகர் சிலைகளை சுமந்து வந்த வாகனங்கள் எல்லாம், காந்தி மண்டபத்தின் முன் நிறுத்தப்பட்டு, விநாயகர் சிலைகளை சுமந்து முக்கடல் சங்கம கடற்கரை பகுதியில் கொண்டுவந்து வரிசையாக வைக்கப்பட்டது.

இந்து முன்னணி சார்பாக கடந்த 30_ வருடங்களாக இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது.

நிகழ்வை கடந்த 30 _ஆண்டுகளாக முறைப்படுத்தி நடத்தும்,இந்து முன்னணியை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.எ. அசோகனிடம் கேட்டபோது. குமரி மாவட்டத்தில் இன்று 10_(செப்டம்பர்15)ல் இடங்களில் கடல் மற்றும் ஆற்று நீரில், கடந்த 9நாட்களாக பூஜையில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை கரைக்கும் அய்தீகம் இன்று பின்பட்டப்பட்டது.

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இன்று நடக்கும் விநாயகர் கடலில் கரைக்கும் நிகழ்வின் 31_வது ஆண்டு. இன்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பூஜைக்கு பின் 88_சின்னதும்,பெரியதுமாக விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது என தெரிவித்தார்.

சுசீந்திரம் முதல் கன்னியாகுமரி வரையிலான இடைப்பட்ட சாலை சந்திப்புகளில் காலை முதலே விநாயகர் சிலைகளின் ஊர்வலம் நிறைவடையும் வரை காவல்துறை ஏராளமாக குவிக்கப்பட்டிருந்ததுடன், பாதுகாப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன் இரவு 7.50 மணிக்கு கடலில் விநாயகர் கரைக்கும் பணி முழுமையாக நிறைவடைந்தது.