• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தளபதி 66 ல் இணையும் 80ஸ் டாப் ஹீரோ

ஏப்ரல் 6 ம் தேதி பூஜையுடன் சென்னையில் துவங்கப்பட்ட தளபதி 66 படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் மிக சில நாட்களே மட்டுமே சென்னையில் நடத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட ஷுட்டிங் வரும் வாரத்தில் துவங்கப்பட உள்ளதாம். இரண்டாம் கட்ட ஷுட்டிங்கை ஐதராபாத்தில் நடத்த டைரக்டர் வம்சி பிளான் செய்திருந்தார். ஆனால் தமிழ் திரைப்பட தொழிலாளர் சங்கத்தினருக்கு உதவுவதற்காக அதை சென்னையிலேயே நடத்த விஜய் கேட்டுள்ளார். வேறு வழியில்லாமல் ஓகே சொன்ன படக்குழுவினர், சென்னையிலேயே பிரம்மாண்ட செட்டை அமைத்து வருகிறார்கள்.

தளபதி 66 படத்தில் விஜய்க்கும் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார். ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். வில்லனாக விவேக் ஓபராய் நடிக்கிறார் என கூறப்பட்ட நிலையில் நேற்று, விஜய்க்கு அண்ணனாக தமிழ் சினிமாவின் வெள்ளிவிழா நாயகன் மைக் மோகன் நடிப்பதாக அப்டேட் வெளியிடப்பட்டது. கதைப்படி விஜய்க்கு இரண்டு அண்ணன்களாம். சரத்குமாரின் மூன்றாவது மகன் ரோலில் தான் விஜய் நடிக்கிறார்.

லேட்டஸ்ட் தகவலாக, விஜய்யின் மற்றொரு அண்ணன் ரோலில் நடிக்க தெலுங்கு அல்லது மலையாள திரையுலகை சேர்ந்த ஒரு டாப் நடிகரிடம் பேசப்பட்டு வருகிறதாம். தளபதி 66 படத்தில் மோகன்லால் அல்லது நாகர்ஜுனா நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டதால் இவர்களில் ஒருவர் விஜய்க்கு அண்ணன் ரோலுக்காக தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.