• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் 80ஸ் நடிகை

Byமதி

Sep 27, 2021

1980-களில் தமிழ், தெலுங்கு முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாகவும் நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது கதவு, வேலைக்காரன், வேதம் புதிது, அக்னி நட்சத்திரம், கொடி பறக்குது, மாப்பிள்ளை, வெற்றி விழா உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார்.

1991-ல் கற்பூர முல்லை என்ற படத்தில் கடைசியாக நடித்து இருந்தார். அதன் பிறகு தெலுங்கு நடிகர் நாகஅர்ஜுனாவை திருமணம் செய்துகொண்டு படங்களில் நடிப்பதில் இருந்து விலகிக் கொண்ரார்.

30 வருடங்களுக்கு பிறகு தற்போது கணம் என்ற தமிழ் படத்தில் அமலா மீண்டும் நடிக்கிறார். இந்த படத்தில் ஷர்வானந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இவரும் கடைசியாக 2015-ல் வெளியான ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நடித்து இருந்தார்.

அதன்பிறகு, ஷர்வானந்த் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தார். 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கணம் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். இதில் ஷர்வானந்த் ஜோடியாக ரீதுவர்மா நடிக்கிறார். நாசர், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். இந்த படத்தை ஸ்ரீகார்த்திக் இயக்குகிறார்.