கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள பட்டூர் கிராமத்தை சேர்ந்த மணிமேகலை வயது 70 என்பர் தனது வீட்டில் நேற்று இரவு வழக்கம் போல் தூக்கிக் கொண்டு இருந்த போது பக்கத்தில் உள்ள அவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் கதவை உடைத்து பீரோவில் இருந்த 23ஆயிரம் ரொக்கம் மற்றும் அருகே ஒரு பாத்திரத்தில் முத்து சோளத்தில் பதுக்கி வைத்திருந்த 8சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிக் கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வி வயது 65 என்பவரது வீட்டில் கதவை உடைத்து பீரோவில் இருந்த 8 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மட்டும் மர்ம நபர்கள் திருடிக் கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் மதியழகன் மற்றும் செல்வராஜ் ஆகியோர் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி தகவல் அறிந்து சம்பவிடத்திற்கு சென்ற ஆவினங்குடி போலீசார் தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ஒரு கிராமத்தில் நான்கு வீடுகளில் பூட்டை உடைத்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது