• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பிப்.7ல் தேமுதிக மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

Byadmin

Feb 3, 2024

வருகிற பிப்ரவரி 7ஆம் தேதியன்று தேமுதிக மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தேமுதிக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,
சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமைக்கழகத்தில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிஜயகாந்த் தலைமையில் பிப்ரவரி 7ஆம் தேதி, புதன்கிழமை அன்ற நடைபெறும் எனவும், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாது இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் தேமுதிக தலைமைக்கழகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.