திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மெய்யம்பட்டியில் உள்ள ராம்சன்ஸ் பள்ளி மாணவ மாணவிகள் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நத்தம் பேருந்து நிலையத்திலிருந்து காவல் நிலையம், நத்தம் அவுட்டர், அம்மன்குளம் வழியாக மெய்யம்பட்டி வரை ஸ்கேட்டிங் ஓட்டியபடி கையில் தேசிய கொடியை ஏந்தியவாறும், பொய்க்கால் கட்டை காலுடன் சிலம்பம் சுற்றியவாறு போதைப் பொருளுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறும் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 3 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாகச் சென்றனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் ஸ்கேட்டிங் ஓட்டியபடி தேசிய கொடியை கையில் ஏந்தி போதைப் பொருளுக்கு எதிராக கோஷமிட்டபடி சென்றது பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
