இந்திய சுதந்திரத்தின் 79 ஆண்டு கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடலில். இந்திய தேசிய மூன்று வண்ணக் கொடியை குமரி ஆட்சியர் அழகு மீனா இயற்றினார். நிகழ்வில் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின், அரசின் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆட்சியர் அழகு மீனா இந்திய தேசிய கொடியை இயற்றியதை அடுத்து. இந்தியா
எப்போதும் சமாதானத்தை நேசிக்கும் நாடு என்பதின் அடையாளமாக புறாக்கள் பறக்கவிட்டதை தொடர்ந்து. சிகப்பு,வெள்ளை,பச்சை வண்ண பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டது.
காவல்துறை அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் அழகு மீனா,இதனை தொடர்ந்து திறந்த வாகனத்தில் ஆட்சியர் காவல்துறை கண்காணிப்பாளர்,
அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார்கள்.

அரசின் பல்வேறு துறைகள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு விளையாட்டுகளில் சாதனை செய்த மாணவ, மாணவிகள் வரிசையில். சமூக சேவைக்காக பத்மஸ்ரீ விருது பெற்ற. சுவாமி விவேகானந்தா கேந்திராவின் ஆயுள் கால உறுப்பினர் நிவேதிதா ரகுநாத்பிடே,
கணேசன், திருமதி. வனஜா குமாரி, முருகேசன், முனைவர் ஆ.பழனியாபிள்ளை
பிள்ளையார், நயினார், கே.எம்.செல்வ குமார் ஆட்சியர் அழகு மீனா விடம் இருந்து பாராட்டு சான்றிதழ் பெற்றுக்கொண்டார்கள்.
பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.