• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இந்திய குடியரசின் 75_வது ஆண்டு கொண்டாட்டம்

இந்திய சுதந்திர போராட்டம் அண்ணல் காந்தியடிகள் தலைமையில். கத்தி இன்றி, இரத்தம் இன்றி அகிம்சை வழி போராட்டத்தில் வெற்றி பெற்றது அன்று உலக நாடுகள் கண்ட அதிசயம்.

இந்திய சுதந்திரத்திற்குப்பின் நாடு மக்கள் ஆட்சியின் குடியரசு ஆகியதின் 75_வது ஆண்டு விழா நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடலில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் இந்திய தேசிய மூவர்ண கொடியை இயற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மற்றும் உயர் அதிகாரிகள், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் தமிழக அரசின் பால்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் , பள்ளி மாணவ, மாணவிகள், பொது மக்கள் என பல்வேறு பிரிவினர்களும், தாய் திரு நாட்டின் 75_வது ஆண்டை கூடி கொண்டாடினார்கள்.

குடியரசு தினவிழா நடைபெறும் அண்ணா விளையாட்டு திடல் 3_அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.

அண்ணா விளையாட்டு திடல் உள்ளே செல்லும் பகுதியில் ஒவ்வொரு வரையும் மெட்டல் டிடெக்டர் வழியாக செல்லுவதை காவல்துறை கண்காண்பித்தனர்.